Tamil Cinema News | சினிமா செய்திகள்
பில்லுக்காக எஸ்பிபி இறந்ததை மறைத்த மருத்துவமனை.. உண்மையில் நடந்தது என்ன?

ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி நேற்று முன்தினம் இறந்து விட்டார் என்ற செய்தி 1.04 மணிக்கு வெளியிட்டனர்.
ஆனால் அதற்கு முன்னரே சமூகவலைத்தளங்களில் எஸ்பிபி இறந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்கான கட்டணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே அறிக்கையை வெளியிடுவோம் என்று MGM மருத்துவமனை தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்து சர்ச்சையானது.
உலகப் புகழ் பெற்ற கலைஞனுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனால் எஸ்பிபி குடும்பத்தினர் ஜனாதிபதியை அனுப்பியதாகவும் அதற்குப் பின்னரே அறிக்கை வெளியிட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.
ஆனால் இது உண்மை இல்லை என்றும் MGM மருத்துவமனை மேல் கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக வெளியிட்ட தவறான செய்தி என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது எஸ்பிபி சரண் 2 நாள்களுக்கு ஒருமுறை வீடியோ வெளியிட்டு எஸ்பிபி-யின் உடல்நிலையை தெரிவித்து வந்த சூழ்நிலையில், ஒருவேளை முன்னந்தகவே இறந்து இருந்தால் கண்டிப்பாக அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பார்.
அதனால் 1.04 மணிக்கு இறந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடைசி நிமிடம் வரை மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுவதற்கு போராடினார்கள் என்பதற்கான வீடியோவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
