“தலைவரே சிம்பு, தயவு செய்து மாறுங்க!” இளம் ஹீரோவின் உருக்கமான வேண்டுகோள்.

இப்படி ஒரு வேண்டுகோள் வைத்தது மெட்ரோ படத்தின் நாயகன் சிரிஷ் தான்.

சிம்பு

சிம்புவும் சர்ச்சைகளும் என்ற பெயரில் படம் எடுக்கும் அளவிற்கு அவரை பற்றிய பல விஷயங்கள் வெளியாகியுள்ளது. சிம்புவுக்கு எதிராக  நெருக்கடி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவரும் அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அசராமல் தான் இருக்கிறார்.

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தைத் தயாரித்த வகையில், மைக்கேல் ராயப்பனுக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம். சில நாட்களுக்கு முன் தாங்கள் பட்ட இன்னல்களை பற்றி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்  மைக்கேல் ராயப்பன் மற்றும் படத்தின் இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக ” படத்தில் நடித்து, வெளியாகி முடிந்துவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை. சொல்லப்போனால் ராயப்பன் அவர்கள் எனக்கு 3 .5  கோடி சம்பள பாக்கி வைத்தார் என்று படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே நான் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு ரெட் கார்டு கொடுத்தால், அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும் ” என்று சிம்பு தன் தரப்பின் வாதத்தை  கூறியுள்ளார்.

‘மெட்ரோ’ சிரிஷ்

‘மெட்ரோ’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்  நடிகர் சிரிஷ்.  தற்பொழுது  ராஜா ரங்குஸ்கி, பிஸ்தா படங்களில் நடித்து வருகிறார். ‘ராஜா ரங்குஸ்கி’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. இசையமைப்பாளர் யுவன் கேட்டுகொண்டதற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடினார் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. சிரிஷ் மற்றும் சிம்பு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவருக்காக பாடியதாக அப்பொழுது செய்திகள் வெளியானது.

Metro Sirish, Yuvan Shankar Raja, STR

இந்நிலையில் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் சிரிஷ் இந்த டீவீட்டை போட்டுள்ளார்..

“சந்தர்ப்ப சூழ்நிலை காரணங்களால் மனிதர்கள் ஒரு வித செயல்களை செய்யக்கூடும். சில சம்பவங் களை வைத்து  நம்மால் ஒருவரை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தற்பொழுது  என்ன கூறப்பட்டுள்ளதோ அது உண்மை என்றால்,  என் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்ற செயல்களை நீங்கள்  மாற்ற வேண்டும். இது ஒரு ரசிகனான என் ஆசை. என்ன நடந்தாலும் சரி நான் என்றுமே  உங்களின் தீவிர ரசிகன் தான்.”  என டுவிட் செய்திருக்கிறார்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

ஒருபுறம் அதிகரிக்கும் எதிர்ப்பு, மறுபுறம் ஆதரவு. அன்றும் இன்றும் என்றும் சிம்பு புரியாத புதிர் தான்.

Comments

comments