fbpx
Connect with us

பத்து ரூபாய்க்கு கேப் வசதி.. ஓலா கார்களை துரத்தி அடித்த அரசு.. கண்டிப்பா பாருங்க தேவைப்படும்

metro-cab-in-chennai

Tamil Nadu | தமிழ் நாடு

பத்து ரூபாய்க்கு கேப் வசதி.. ஓலா கார்களை துரத்தி அடித்த அரசு.. கண்டிப்பா பாருங்க தேவைப்படும்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் தற்போது புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

பெங்களூர் மெகா கேப்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து சென்னை மெட்ரோ புதிதாக கேப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக புதிய செயலி ஒன்று வெளியிட்டுள்ளனர், இந்த வாரம்  திங்கட்கிழமை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்,  அதுமட்டுமில்லாமல் மெட்ரோ நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிற்கு வெறும் ரூபாய்.10 வசூலிக்கப்படுகிறது.

இன்னும் கூடுதல் வசதியாக மெட்ரோ ஸ்டேஷன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையைச் சார்ந்து மக்களுக்கு பயன் படுத்தப்படும் இந்த சேவை கண்டிப்பாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top