ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இளைஞர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் படம் மெட்ரோ. அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சங்கிலி பறிப்பு பற்றிய தகவல்களை கமர்ஷியல் அம்சங்களுடன் சுவாரஸ்யமாக கூறியதால் வெகுஜன ரசிகர்கள் வரை இப்படம் சென்றடைந்தது.

இதைதொடர்ந்து விரைவில் இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக போவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஹிந்தியிலும் இப்படம் ரீமேக் ஆகும் எனவும் இதன் ஹிந்தி ரீமேக்கை ஆனந்த கிருஷ்ணனே இயக்குவார் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.