Tamil Cinema News | சினிமா செய்திகள்
#Metoo நானும் பாலியலில் சிக்கினேன்! யாஷிகா.. இதென்னடா பாலியலுக்கு வந்த சோதனை..
தினம் ஏதாவது ஒரு #METOO சம்பந்தமான சினிமா செய்தி வந்து கொண்டே இருக்கின்றது. இதனை அடுத்து பல பெண்கள் இந்த பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரியவருகிறது. சமீபத்தில் பிரச்சனைகளில் பின்னணி பாடகியான சின்மயி மற்றும் வைரமுத்து, கன்னட நடிகை ஸ்ருதி, நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதைப்போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கக்கூடாது என்று சினிமா துறையில் இருந்து ஒரு குழு அமைத்து உள்ளனர். அந்தக் குழு இதைப் போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்றனர். ஆனால் இதனை ஒரு பெண்ணாக எப்படி ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
சில நாட்களாக பிரபலமாக பேசப்பட்டு வந்த பிக்பாஸ் 2 வில் நடித்த யாஷிகா பாலியல் துன்புறுத்தப்பட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார். சினிமா வாய்ப்பு தேடும்போது ஒரு இயக்குனரால் பாலியல் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இது போன்ற பிரச்சினைகளை பெண்களை கையிலெடுத்து தனக்கென்ற உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.

yashika
இதுபோன்ற #METOO பிரச்சனைகளின் போது செய்தியாளரை சந்தித்த பின்னணி பாடகி சின்மயி, செய்தியாளர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டார். இதனால் அவரை தவறு சொல்ல முடியாது. அது அவர்களுடைய இயல்பான தன்மையாக இருக்கலாம், ஆனால் நமது கலாச்சாரத்தில் இதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தயவு செய்து அந்த வீடியோவை மறுபடியும் youtube இல் தேடாதீர்கள் நண்பர்களே.
ஆண்கள் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் என்பது தானே நமது தமிழ் கலாச்சாரம் அதனை வளர்ந்து வரும் தலைமுறைகளுக்கும் கற்றுக்கொடுப்போம் நன்றி.
