Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல தமிழ் நடிகையின் மீது ஜிப்பை கழட்டி பாய்ந்த இமைக்கா நொடிகள் வில்லன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்திய சினிமாவில் #METoo பிரச்சனை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் ‘தேரோடும் வீதியிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பயல் கோஷ், தற்போது திடீரென்று #METoo பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
அதாவது பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான அனுராக் காஷ்யப் தன்னை வீட்டுக்கு வரவழைத்து, வலுக்கட்டாயமாக சிப்பை கழட்டி, தன்னுடன் உடலுறவு கொள்ள முயற்சித்ததாக அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலாக பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. முதல் முறை பார்க்கும்போது சினிமாவில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை விவாதித்ததாகவும்.
இரண்டாவது முறை அனுராக் வீட்டிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குப் பின்னர் தன்னை போனில் அழைத்து வீட்டிற்கு வரும்படி கூறியதாகவும், வீட்டினுள் சென்ற உடன் வலுக்கட்டாயமாக தன்னை உடலுறவுக்கு அழைத்ததாகவும், அங்கே இருந்து கூச்சலிட்டு தப்பித்து ஓடி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவர் தனக்கு மெசேஜ் செய்து மீண்டும் வீட்டுக்கு வர சொன்னார் என்பது போன்று அவர் கூறியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க அனுராக் காஷ்யப் இந்த புகர்ப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதாவது பயல் தன் மேல் பாலியல் துன்புறுத்தல் என கூறியிருப்பது ஆதாரமற்றது.
இது போன்ற கொடுமைகளுக்கு நான் ஒருபோதும் ஊக்குவிப்பது இல்லை என்றும், பயல் கோஷிடம் நான் தவறாக நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
