Tamil Cinema News | சினிமா செய்திகள்
நானும் #MeToo வில் இணைகிறேன்.. அடுத்த பாலியல் தொல்லை நிவேதா பெத்துராஜ்
நம்ம சினிமா நியூஸ் எடுத்தாலே #Metoo நியூஸ் போடாம இருக்க முடியாது போல. சரி இன்னைக்கு யார் என்ன சொல்லியிருக்கா என்பதை பார்க்கலாமா, நிவேதா பெத்துராஜ் தானும் பாலியல் தொல்லை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். இவர் ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் போன்ற படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சென்னையில் நடைபெற்ற திமிரு புடிச்சவன் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தப் படத்திற்காக தான் புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டதாகவும், மீன்பிடி வண்டி ஓட்ட கற்றுக் கொண்டதாகவும் கூறினார். படத்தை முழுமையாக பார்க்கும்போது பிரமித்து விட்டேன் என்று கூறினார். சரியான முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.
செய்தியாளர்கள் அவரிடம் #Metoo பற்றி கேட்கும்போது அவர் கூறியது என்னவென்றால் ஒரு முறை பார்ட்டியின் போது பாலியல் தொல்லைக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்ல இருப்பது என்னவென்றால் இது சினிமா துறை என்பதால் அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர் ஆனால் பல துறையில் பல பெண்கள் இந்த பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திமிரு புடிச்சவன் திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படத்தின் மையக்கருத்து ஒரு காவல் துறை அதிகாரி கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறுவது எப்படி என்பதுதான் பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்.
