Tamil Cinema News | சினிமா செய்திகள்
#Metoo பாலியல் விவகாரம்.. வைரமுத்து மகன் சொன்ன அதிரடி கருத்து
MeToo வைரமுத்து அவர்களின் பிரச்சினையை பிரம்மாண்ட பொழுதுபோக்காக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். நம் நாட்டில் நிகழும் பல பிரச்சனைகளை திசை திருப்பும் வண்ணமாக முயல்கின்றனர். இதனை நம் மக்கள் அறிவார்ந்த சிந்தனையோடு செயல்பட வேண்டும். கபிலன் வைரமுத்து இதை பற்றி கூறும் பொழுது இதில் அரசியல் உள்நோக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சொல்வது ஆபத்தானது என்றும் கபிலன் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் செய்யப்படுவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி என்றும் கூறியுள்ளார். கபிலன் கூறிய கருத்தை பார்க்கும் போது நல்ல ஒரு முற்போக்கு சிந்தனை இருப்பதாக தெரிகிறது.
இப்பொழுதுள்ள அரசியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருப்பதால் அதனை திசை திருப்பும் பல பிரச்சனைகளை ஊடகங்கள் மூலம் கொண்டு வருகின்றனர். இதனால் உண்மை பிரச்சினைகளை மக்கள் மறந்து விடுகின்றனர் மறதி ஒரு கொடிய நோய்.
நேரடியாக அல்லது மறைமுகமாகவோ நாம் சில நாட்களாக பாதிக்கப்பட்டு வருகிறோம் என்றால் Land registration அரசு நிர்ணயிக்கும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது ஒன்று. மற்றொன்று வீட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை யார் கேட்கப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
