விஜய் நடித்துள்ள மெர்சல் தீபாவளிக்கு வெளி வருமா வராதா என்று அவரது ரசிகர்கள் தலையை உருட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் பாகுபலி டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதை கேட்டு விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகிறார்கள்.

அட்லி இயக்கி உள்ள மெர்சல் தீபாவளிக்கு வெளியாக இருந்தது. தமிழக அரசு கேளிக்கை வரியை உயர்த்தியிருப்பதன் மூலம் படம் வெளி வருவதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால் அனைத்து புதிய தமிழ் படங்களும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன.

இதனிடையே மெர்சல் தலைப்பு சம்பந்தமாக நீதிமன்றம் தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது. ஆகவே தலைப்பு இல்லாமல் படத்தை விளம்பரப்படுத்துவதில் சிக்கல் வலுத்துள்ளது.இதனால் மெர்சல் படத்தை விளம்பரம் படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  தெறி அப்டேட்- விஜய்யை அசர வைத்த அட்லீ

இந்நிலையில் பாகுபலி இயக்குநர் ராஜமெளலி, இந்தப் படம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 25. விஜய்க்கும் 61. தேணாண்டாள் ஃபிலிம்ஸுக்கு 100வது படம்.

இந்த அற்புதான படத்திற்காக நான் காத்து கொண்டிருக்கிறேன். நான் நிச்சயமாக சொல்கிறேன். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்று கூறியிருக்கிறார். கூடவே அட்லியை வாழ்த்தியிருக்கிறார்.

அதிகம் படித்தவை:  வெளிப்படையாக தெறி வசூலை கூறி அதிர்ச்சியடைய வைத்த தாணு!

மெர்சல் கதையை எழுதியிருப்பவர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத். இவர்தான் பாகுபலியின் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதியவர்.

ஆகவே அப்பா தன் மகனுக்கு கதையை முன்கூட்டியே கூறியிருப்பார். அதை வைத்தே இவ்வளவு உறுதியாக கருத்து கூறியிருக்கிறார் மகன் என்று விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் வசனம் எழுதி வருகின்றனர்.

மெர்சல் படம் ஹிட் என்று ராஜமெளலியே சொல்லிவிட்டார் இதனால்  விஜய் ரசிகர்கள் அனைவரும் மெர்சல் படத்தை எதிர் பார்த்து காத்துகொண்டிருகிரார்கள்.