“மெர்சல்” அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61 வது படம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, யோகி பாபு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

mersal

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. ‘மெர்சல்’ என்ற டைட்டிலின் ஸ்டைலில் ஆரம்பித்து, ‘இளைய தளபதி’க்கு பதில் வெறும் ‘தளபதி’ என்று குறிப்பிட்டது வரை எல்லாக் கோணத்திலும் கேள்விகள் அனல் பறந்தன.

’மெர்சல்’ படத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் இருந்தாலும், படம் அறிவித்தது போல தீபாவளியன்று வெளியாகும், என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதே சமயம், படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முடிந்தரை குறுகிய நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று இப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

vijay mersal

அதற்காக, தமிழகம் முழுவதும் விநியோக முறையில் ‘மெர்சல்’ படத்தை வியாபராம் செய்து வரும் நிலையில், சென்னையில் விநியோக உரிமையை ரூ.10 கோடி டெபாசிட் கொடுத்து அபிராமி மெகாமால் சார்பில், அபிராமி ராமநாதன் பெற்றுள்ளாராம். சுமார் 22 கோடி ரூபாய் மொத்த வசூலானால் பத்து கோடி ரூபாய் அசல் கிடைக்குமாம்.

இந்நிலையில், தமிழக தியேட்டர் உரிமை மட்டும் 75 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது மெர்சல். அப்படியென்றால் இந்தபடம் தமிழ் நாட்டில் மட்டும் சரியாக 122 கோடி வசூல் செய்ய வேண்டும்.

அப்போது தான் விநியோகஸ்தர்களின் நட்டகணக்கிலிருந்து எஸ்கேப் ஆக முடியும். 122 கோடி வசூல் செய்த பிறகு தான் லாபக்கணக்கு ஆரம்பமாகும்.

mersal

மேலும், தீபாவளி விடுமுறையையும், அதையடுத்து வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறைகளையில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் ‘மெர்சல்’ படத்தை மட்டுமே பார்த்தால் தான் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியும் என்பதால், ‘மெர்சல்’-ளுக்கு போட்டியாக தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் முட்டுக்கடை போடுவது, வேறூ எந்த படங்களும் வெளியாகதபடி சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறதாம்.

இன்னும் சில படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படத்தின் விமர்சனத்தை பொருத்து வெள்ளிகிழமை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.