fbpx
Connect with us

Cinemapettai

மெர்சலை பார்த்து மிரண்ட யு-டியூப்! என்ன சொன்னாங்க தெரியுமா?

News | செய்திகள்

மெர்சலை பார்த்து மிரண்ட யு-டியூப்! என்ன சொன்னாங்க தெரியுமா?

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மெர்சல் டீசர் வெளிவந்த பல லட்சம் லைக்ஸுகளை பெற்று 14 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதை வெளியிட்ட யு-டியூப் நிறுவனமே தங்கள் டுவிட்டர் பக்கத்தில் Epic Thalabathi என்று குறிப்பிட்டுள்ளனர், ஒரு தமிழ் டீசர் இவ்வளவு பெரிய வரவேற்பு பெறுவதை கண்டு வட இந்திய சினிமா கலைஞர்கள் அதிர்ந்து தான் உள்ளனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top