விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா எனப் பல நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாகயிருக்கிறது மெர்சல்.

‘தெறி’ படத்துக்குப் பிறகு, ‘மெர்சல்’ மூலம் இரண்டாவது முறையாக விஜயை இயக்கியிருக்கிறார், இயக்குநர் அட்லி. ’உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’ படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

mersal

மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்ததால், ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் படத்துக்கான இரண்டு புரொமோ வீடியோக்களை மட்டும் படக்குழு வெளியிட்டிருந்தது.

அதிகம் படித்தவை:  அஜித்,விஜய் முதலில் எங்கு சந்தித்தார் என்று தெரிமா ?முதலில் என்ன பேசினார்கள்

அந்த இரண்டு புரொமோக்களையும் ஹிட்டாக்கிய விஜய் ரசிகர்கள், ’ட்ரெய்லர் எங்க பாஸ்…’ என வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.

இதற்கிடையில், ’மெர்சல் படத்தின் ட்ரெய்லர் வராது’ எனச் சில தகவல்கள் வருகின்றன. அதை உறுதிசெய்ய படக்குழுவினரைத் தொடர்பு கொண்டபோது, ‘’ட்ரெய்லரை ரிலீஸ் செய்யும் ப்ளானே இல்லை.

mersal audio teaser 1

மேலும் ஒரு ப்ரொமோ வீடியோ மட்டும் வெளியிட ப்ளான் செய்திருக்கிறோம். அதுவும் உறுதியாக வரும் எனச் சொல்ல முடியாது’’ என்றனர்.

விஜய் ரசிகர்களின் முழு கவனமும் மெர்சல் படத்தை எப்படி பிரம்மாண்டமாக வரவேற்பது என்பது மட்டும் தான்.

அதிகம் படித்தவை:  விஜய் விலகியதால் பவன் கல்யாணிடம் செல்லும் எஸ். ஜே. சூர்யா?

சில பிரச்சனைகள் இருந்தாலும் கண்டிப்பாக மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு உறுதியாக கூறிவருகின்றனர்.

Mersal-First-look-poster

இந்த நிலையில் அட்லீ ஒருபக்கம் மெர்சல் படம் குறித்து சில தகவல்களை கூறிவருகிறார். அதில் 80களில் வரும் காட்சிகள் படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள் இடம்பெற்றிருக்கிறது.

படத்தின் முக்கிய ஹைலைட்டாக இந்த கேரக்டர் இருக்கும் என்று அட்லீ கூறியுள்ளார். படத்தில் கிராமத்து பஞ்சாயத்து தலைவராக வரும் விஜயின் பெயர் “தளபதி” என்று கூறியுள்ளார் அட்லி.