விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைஉலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய், திரையுலகில் நுழைந்து 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. சமீபத்தில், அட்லி இயக்கத்தில் இவர் நடித்த மெர்சல் படம் விஜய்யின் 61 வது படமாகும்.

நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

vijay

பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நிலையிலும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி, , தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என தென்னிந்தியாவிலும், மற்ற பிற வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தில் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என மூவர் நாயகிகளாக நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  மெர்சல் மேஜிக் காட்சி எப்படி எடுக்கப்பட்டது தெரியுமா.! இந்த வீடியோவை பாருங்கள்.!
vijay

இந்தப் படத்துக்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பினாலும், அதுவே படத்துக்கு சிறந்த இலவச விளம்பரமாக மாறி; வசூலைக் குவித்து வருகிறது.இந்நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றைய நிலவத்தின்படி, விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.420 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஒரு படத்தில் நடிக்க விஜய் வாங்கும் சம்பளம் ரூ.26 கோடி! இவைத்தவிர, கல்யாண மண்டபங்கள், காலி இடங்கள் போன்ற தனிப்பட்ட முதலீடுகள் மூலம் ரூ.95 கோடி விஜய்க்கு வருமானம் கிடைக்கிறதாம்! தவிர, விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.5 கோடி பெறுகிறாராம்.

அதிகம் படித்தவை:  விஜய் அண்ணா தான் என்னுடைய சாய்ஸ் - ஜெயம் ரவி
mersal vijay
mersal vijay

விஜய்யிடம் மொத்தமாக ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட், மினி கூப்பர், பி.எம்.டபிள்யூ, ஆடி8 என நான்கு கார்கள் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.5 கோடியாம்! ஆக, ஒட்டு மொத்தமாக நடிகர் விஜய்யின் சொத்துமதிப்பு ரூ.420 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவையெல்லாம், விஜய்யின் சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்கள் தான்! விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், அம்மா ஷோபா பெயரில் உள்ள சொத்துக்களையும் சேர்த்தால் தளபதியின் சொத்து மதிப்பு தலை சுத்த வைக்கும்! மெர்சலாக்குகிறாரே ‘மெர்சல்’ நாயகன்!