‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி – ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

mersal

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் மெர்சல் பட பிரச்சனை காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.

டைட்டில் தகராறு, கேளிக்கை வரி பிரச்சனை என விஜயின் மெர்சல் படத்திற்கு மேலும் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட ரிலீசுக்கு இன்னும் நான்கே நாள் உள்ள நிலையில் பல்வேறு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கிறது.

mersal magic
mersal magic

எப்படியும் எல்ல பிரச்சனைகளையும் சமாளித்து படத்தை வெளியிட்ட தீருவோம் என தயாரிப்பு தரப்பு ரசிகர்களை சமாதானப்படுத்தி வந்த நிலையில் புறா மூலம் பீட்டா வேட்டு வைத்ததால் தணிக்கை குழு சான்று தர மறுத்துள்ளது. இதனால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகுமா ஆகாதா என ரசிகர்களை புலம்பி வருகின்றனர்.

படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் மெர்சலுக்கான முன்பதிவு பல்வேறு திரையரங்குகள் நேற்றே தொடங்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஆன் லைனில் முன்பதிவு அமோகமாக ஆரம்பித்துள்ளது.

vijay

இந்நிலையில், தணிக்கை குழு சான்று பிரச்சனை காரணமாக படம் வெளியாவதை சிக்கல் நீடித்து வருவதால் தயாரிப்புக்குழு விஜயிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்திப்பு நடந்துள்ளது.

முதலமைச்சரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் நடைபெறும் இச்சந்திப்பில், அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனுள்ளார். மெர்சல் படம் வெளிவருவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், இச்சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பம் ராஜூவும், இயக்குநர் அட்லியும் உடன் இருந்தனராம். கேளிக்கை வரி குறைக்கப்பட்டதற்கு விஜய் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.