vijay

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களுக்குப் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சி தவிர எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மெர்சல் படம் கடந்த ஒரு வாரமாக திரை உலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெர்சல் படத்தில் ஆட்சே பகரமான வசனங்கள் நீக்கப்படுமா? என்ற நிலையும் ஏற்பட்டது. இறுதியில் காட்சிகளோ, வசனங்களோ நீக்கம் இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

mersal

மெர்சல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழில் வெளியான இந்த படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

அதிகம் படித்தவை:  மெர்சல் சர்ச்சையில் விஜய் கைது செய்யப்படுவாரா.?

திரைப்படம் எடுப்பவர்களுக்கு தற்போது இலவசமான விளம்பரமாக அமைவது யு டியூபில் வெளியிடப்படும் வீடியோக்கள் தான். அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த வீடியோக்களை வெளியிடும் ஆடியோ நிறுவனங்களுக்கு நல்ல வரவேற்பும், வரவும் கிடைக்கிறது.

mersal-box

‘மெர்சல்’ திரைப்படத்திற்காக இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. டீசர், பாடல் டீசர், படத்திற்கான புரோமோ, பாடல் வரிகள் வீடியோ என ஆகஸ்ட் மாதத்திலிருந்தே இந்த யு டியுப் அதிர ஆரம்பமாகியது. படத்தின் டீசர் வெளிவந்தும் குறுகிய நேரத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகள் பெற்று உலக சாதனையையும் படைத்தது.

இந்த மொத்த வீடியோக்களும் தற்போது 10 கோடி பார்வைகளைக் கடந்து மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளன. இந்த வீடியோக்களில் அதிக பட்சமாக ‘மெர்சல்’ டீசருக்கு 3 கோடியே 25 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.

அதிகம் படித்தவை:  தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர்தான் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
mersal nithya menon

அதற்கு அடுத்து ‘ஆளப் போறான்’ பாடல் வரிகள் வீடியோ 2 கோடியே 40 லட்சம் பார்வைகளையும், ‘மெர்சல் அரசன்’ பாடல் வரிகள் வீடியோ 1 கோடியே 3 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளன. மற்ற இரண்டு பாடல்களான ‘மாச்சோ, நீதானே’ பாடல் வரிகள் வீடியோ 1 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

நேற்று வெளியான ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ டிரைலர் 12 லட்சம் பார்வைகளைப் பெற்று தற்போது யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

mersal

‘மெர்சல்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளதாலும், படம் தற்போது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாலும் இந்தப் பார்வைகளின் எண்ணிக்கை மேலும் அதிமாக வாய்ப்புள்ளது.