fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் மெர்சலில் மூன்று விஜய் கிடையாது வெளிவந்த மெர்சல் அப்டேட்.

News | செய்திகள்

விஜய்யின் மெர்சலில் மூன்று விஜய் கிடையாது வெளிவந்த மெர்சல் அப்டேட்.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர்.  சில தினங்களுக்கு முன்னர் தான் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு பார்சிலோ கிளம்பி சென்றார் விஜய். இப்படத்தின் டீசர் அட்லீயின் பிறந்தநாளையொட்டி (செப்., 21) மாலை சரியாக 6மணிக்கு வெளியிடப்பட்டது.

“நீ பற்றி வைத்த நெருப்பு ஒன்று பற்றி எறிய உன்னை கேட்கும். நீ விதை வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்…” என்ற வசனத்துடன் விஜய்யின் மெர்சல் டீசர் தொடங்குகிறது. சுமார் 1.15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில், கிராமத்து விஜய், காளையுடன் விஜய் இருப்பது, மேஜிக்மேன் விஜய் என டீசர் முழுக்க முழுக்க அவர் தான் தோன்றுகிறார்கள்.

கூடவே விஜய்யின் அதிரடி சண்டைக்காட்சிகள், நடனங்கள் இடம் பெற்றுள்ளன.டீசர் வெளியிடப்பட்ட அரை மணிநேரத்தில் மெர்சல் டீசருக்கு 5 லட்சம் லைக்குகளும், 96 ஆயிரம் டிஸ்லைக்குகளும் பெற்று சாதனை படைத்தது. குறுகிய காலத்தில் இவ்வளவு லட்சம் லைக்குகள் பெற்ற டீசர் விஜய்யின் மெர்சல் தான்.mersal audio teaser 1

சமீபத்தில் அஜித்தின் விவேகம் டீசர் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்தது. அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற முனைப்போடு விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு இவ்வளவு லைக்குகளையும், பார்வைகளையும் அள்ளி தெளித்து வந்தனர். இதன்காரணமாக மெர்சல் டீசர் இந்திய அளவில் டிரென்ட்டிங்கில் உள்ளது.

விஜய் நடித்துள்ள மெர்சல் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக இப்படம் வரவுள்ளது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் காமெடியனாக வடிவேலு இறங்கியுள்ளார்.

வைகைப்புயலாக இவர் இருந்தாலும் பெரும்பாலும் படம் முழுக்க வருவார். ஆனால் இப்படத்தில் இவருக்கு சில காட்சிகள் தானாம். அதோடு ஒரு குணச்சித்திர நடிகராகவும் தோன்றுவாராம்.

ஏற்கனவே விஜய்யுடன் காவலன், சுறா, வில்லு, போக்கிரி என இவர் செய்த காமெடிகள் செமயாக ஒர்க்கவுட் ஆனது. இருந்த போதிலும் மெர்சல் படத்தில் மேஜிக் மேன் விஜய்யுடன் சில காமெடி காட்சிகள் மட்டும் தானாம்.

முன்னதாக, விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வந்தன. ஆனால், இரண்டு விஜய் மட்டும் தான் என்று தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. கிராமத்து விஜய், மேஜிக் மேனாக இருப்பதும் மெர்சல் அரசனாக இருப்பதும் ஒரே விஜய் தானாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top