“மெர்சல்” ட்ரெய்லர் எப்போ தெரியுமா? பரவும் தகவல்கள்

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது வருகிறது.

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர். மெர்சல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டு பல சாதனைகளை படைத்தது.

விஜய் நடித்த ‘மெர்சல்’ ‘படம் ஆளப்போறான் தமிழன்’ என்ற பெயரில் மாற்றப்படவுள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்படலாம் என தெரிகிறது. ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், ‘மெர்சல்’ என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘மெர்சல்’ தலைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தால், ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இன்று (அக்.3) மெர்சல் தலைப்பு மீதான வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

இயக்குனர் அட்லி, நடிகர் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் மெர்சல். இந்த படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி இந்திய சினிமாவின் அனைத்து டீசர் சாதனைகளையும் ஓரம் கட்டிவிட்டது. உலகிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட வீடியோ என்ற பெருமையை மெர்சல் டீசர் தற்போது பெற்றுள்ளது.

இந்நிலையில், மெர்சல் தலைப்பு தொடர்பான பிரச்னைக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. மேலும், திரைப்படம் வெளியாக இன்னும் சரியாக இரண்டே வாரங்கள் உள்ள நிலையில் மெர்சல் டீசர் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று வெளியாகும் தீர்ப்பை பொறுத்தே மெர்சல் படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிக்கப்படும் எனவும், அனேகமாக இந்த வார இறுதிக்கும் மெர்சல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் கூறுகிறார்கள்.

மெர்சல் டீசறை தெரிக்கவிட்ட விஜய் ரசிகர்கள், இப்போது ட்ரெய்லர் ரிலீசிற்காக காத்திருக்கிறார்கள்.

Comments

comments