mersal

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் டீசர் இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியது
தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், அட்லி கூட்டணியில் உருவான படம் மெர்சல்.

இது, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம்.
இதில், முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய், இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசல், நீதானே பாடல்கள் போன்றவை ரசிகர்களை ஈர்த்த நிலையில், மெர்சல் டீசரும் இப்பொழுது வெளியாகியுள்ளது, இதனை விஜய் ரசிகர்கள் சமூகவளைதலங்களில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.

மெர்சல் டீசர் வெளியாகி 10 நிமிடத்தில் 1 லட்சம் லைக் பெற்றுள்ளது, கபாலி விவேகம், தெரி அனைத்து ரெக்கார்டையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.