விஜய் தன் நடிப்பின் திறமையால் மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றவர் விஜய்யின் படம் வந்தாலே பெரும் கூட்டம் வரும் திரையரங்கிற்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் `மெர்சல்’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் விஜய்க்காக மற்றொன்றையும் செய்யவிருக்கிறார்.mersal audio teaser 1

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’.முதல்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர்.

சமீபத்தில் மெர்சல் படத்தில் தனது காட்சிகளை முடித்த நடிகர் விஜய் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றிருக்கிறாராம். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் `மெர்சல் அரசன்’ பாடலை ஜ.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.

இந்நிலையில், `மெர்சல் அரசன்’ பாடலின் தெலுங்கு

பதிப்பையும் அவரே பாடுகிறாராம். அந்த பாடல் விரைவில் ரிலீசாக உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கில் `அதிரிந்தி’ என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் இருந்து பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே `மெர்சல்’ படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது.