Director Atlee
Director Atlee

மெர்சல் படம் வெளியாவதற்கு முன்பும், அதன் பின்னும் பல சர்ச்சைகள் வெடித்தது. நேசனல் மீடியா தொடங்கி சோஷியல் மீடியா வரைக்கும் தொடர்ந்த அது, ‘ நீ பற்ற வைத்த நெருப்பொன்று உனைப் பற்றி எரியக் கேட்கும் நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்கக் காத்திருக்கும்’ என படத்தில் சொல்லப்பட்டது போலவே படத்துக்கு எதிராக பிரச்னையை ஆரம்பித்தவர்களினுடைய தலைகளிலேயே போய் விடிந்தது.

தர்க்க ரீதியாக சில கேள்விகள் முன்வைக்கப் பட்டிருந்தாலும் அவற்றுக்கு நோக்கம் கற்பித்து மதரீதியாக கொண்டு செல்லப்பட்டதால் மெர்சலில் உள்ள தவறான சில தகவல்களும் நீர்த்துப் போயின என்பதுதான் உண்மை. ஜி.எஸ்.டி, டீமானிடைஷேசன் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விஜய்யிடமும், அட்லீயிடமும் கேட்க இன்னும் சில கேள்விகளும் இருக்கின்றன. முதலில் விஜய் விஷயத்துக்கு வருவோம்.

mersal

தம்மாத்துண்டு சிகரெட் மேல வச்ச நம்பிக்கையை உங்கமேல வைங்க விஜய் ..!

துப்பாக்கி படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான போது அதில் புகை பிடித்தவாறு நின்றார் விஜய். பலரும் விஜய் இப்படி செய்யலாமா எனக் கேட்டபோது, ‘ இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன்’ என்றார் விஜய். ஆனால், ”என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்குது, அது சொன்ன சொல்லைக் காப்பாத்துறது…”னு வசனம் பேசும் விஜய், மெர்சலில் அதைக் காற்றில் பறக்கவிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை.

படத்தில் சிகரெட் பிடிக்கும் அவரது கேரக்டரும் அப்படி ஒன்றும் நெகட்டிவான கேரக்டராக இல்லை. பின் ஏன்தான் அப்படி ஒரு காட்சி மிஸ்டர் விஜய்? ஒரு விஜய்யில் இருந்து இன்னொரு விஜய்யைத் தனித்துக் காட்டுவதற்கு தம்மாத்துண்டு சிகரெட் மேல் வச்ச நம்பிக்கையை முதலில் உங்க மேல வைங்க மிஸ்டர் விஜய்.

அதிகம் படித்தவை:  தெறி படத்தின் டீசெருக்காக, இளையதளபதியின் ரசிகர்கள் உருவாக்கிய பிரமாண்டமான "விஜய்"புகைபடம்!
vijaysmoking

புகை பிடிப்பது போல நடிப்பதும் நடிக்காததும் உங்கள் விருப்பம். ஆனால் நடிக்க மாட்டேன் என கோடானு கோடி ரசிகர்கள் முன்னால் சொல்லிவிட்டு இப்போது அதுகுறித்த எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் இதில் நடித்திருப்பதுதான் தற்போது கேள்வி கேட்க வைத்து இருக்கிறது.

தலைவனாகக் கட்டமைக்கப்பட்டு வந்துகொண்டிருக்கும் விஜய்க்கு இது பெரும் கெட்ட பெயரை தரும் என்பதை அட்லீ அறிவாரா? அல்லது அதற்கும் ஒரு விளக்கம் தருவாரா அட்லீ..

தொழில் தர்மம் என்பது டாக்டர்களுக்கு மட்டும்தானா அட்லீ?

அடுத்ததாக அட்லீ விஷயத்துக்கு வரலாம். மெர்சல் படம் டாக்டர்களின் தொழில் தர்மம் குறித்து பேசி இருக்கிறது. துவக்க காட்சியில் வெளிநாட்டில் வேட்டி உருவப்பட்டு மாடியிலே சோதனை செய்யும் இடத்தில் நிற்கிற விஜய், கீழே யாரோ முகம் தெரியாத ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்காக மருத்துவ உதவி செய்ய பாய்ந்தோடி சென்று உதவுகின்றார். டாக்டர்களுடைய தொழில் தர்மத்தை இந்தக்காட்சி நிறுவ முயற்சிக்கிறது. மருத்துவத்தை புனிதம் ஆக்குகிறார். நல்லதுதான்.

mersal

ஆனால் அடுத்த காட்சிதான் அதற்கு நேர்மாறாக அடிப்படை அறமே இல்லாத காட்சியாக இருக்கிறது. மேஜிக் மேனாக இருக்கிற ஒரு விஜய், பார்வையாளராக இருக்கிற ஒரு நபரை (வில்லன்) ‘மேஜிக் செய்து காட்டுறேன் மேலே வாங்க…’ எனக்கூறி நயவஞ்சகமாக கூப்பிட்டு மேடைக்கு அழைத்து அவ்வளவு பேர் முன்னிலையில் அவரைக் கொலை செய்கிறார். அவர் வில்லன் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் சர்க்கார் போஸ்டரை நீக்கிய சன் பிக்சர்ஸ்.! ஏன் தெரியுமா?

ஆனால் அடிப்படையில் தொழில்முறை மேஜிக் மேனாக இருக்கின்ற ஒருவர் தொழில் தர்மத்திற்கு எதிராக பார்வையாளரையே ஏமாற்றிக் கொலை செய்வது அறம் ஆகுமா? டாக்டராக இருக்கிற விஜய் மேஜிக் மேனாக நடித்து அவரை வீழ்த்தி நீதியை நிலைநாட்டுவது போல இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்திருக்கும். ஏனென்றால் இரண்டுக்கும் மலையளவுக்கு வித்தியாசம் இருக்கிறது. ஆனால் முறைப்படியாக மேஜிக் கற்ற ஒருவர் அதிலிருந்து விலகி நின்று பழிவாங்குவது என்கிற கருத்தியல் தவிர்த்திருக்கப்பட வேண்டியது.

mersal vijay
mersal vijay

தொழில் தர்மம் என்பது டாக்டர்களுக்கு மட்டுமேயானது என்கிற தட்டையான புரிதலின் வெளிப்பாடாகவே இது இருக்கின்றது. மனு தர்மத்தின்படி அது சரியானதாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தினில் அது யுத்த தர்மத்தின்படி தவறு என்கிற உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கின்றது.

யுத்த தர்ம நெறிமுறைப்படி வில்லனை பழிவாங்க படத்தில் அவ்வளவு ஸ்கோப் இருந்தும் அதைவிடுத்து, தவறான முறையில் வெளிக்காட்டிய விதம் கண்டிப்பாக தொழில்முறையில் இயங்கும் மேஜிக் கலைஞர்களை நிச்சயம் புண்படுத்தும் விதமாகத்தான் இருந்திருக்கும்.

atlee

போக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களின் இந்தமாதிரி கமர்சியல் வடிவிலான நீதிபோதனை கதையம்சங்களைத் தாங்கிய கதைகளில் கூடுதல் கவனமும் செலுத்தவேண்டும். சினிமாவில் எதை எல்லாம் காட்சிப்படுத்த வேண்டும் என்பதைவிட எதை எல்லாம் முதலில் தவிர்க்க வேண்டுமென்பதை அறிந்து அதன்படி செயல்படுவது, அட்லீ மட்டுமல்ல அனைவரும் கவனத்திலே வைத்திருக்க வேண்டியது ஆகும்.