மெர்சல் படத்தின் சென்சார் ரிசல்ட் மற்றும் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு..!!!

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் படக்குழு நிம்மதி அடைந்துள்ளது.

தெறியை தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.

சமீபத்தில், வெளியான இதன் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது.

வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்… என சாதனை மேல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

பட ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வந்த நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ஏ.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் “மெர்சலாயிட்டேன்” என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன்.mersal audio teaser 1

இதற்கான தலைப்பை 2014-ம் ஆண்டிலே பதிவு செய்திருக்கிறேன். அந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆகவே, மெர்சல் படத்தின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மெர்சல் படத்தின் தலைப்பை பயன்படுத்த இடைக்கால தடை விதித்திருந்தோடு, இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மெர்சல் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் மெர்சல் தலைப்பு வேறு, மெர்சலாயிட்டேன் தலைப்பு வேறு என வாதிடப்பட்டது. அதேப்போன்று ராஜேந்திரனும் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

இருவரின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்ற நிலையில் வழக்கின் மீதான இறுதி தீர்ப்பு நேற்று(அக்., 6) அறிவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி மெர்சல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், மெர்சல் படத்தின் பெயருக்கு தடையில்லை, அந்த பெயரிலேயே படத்தை ரிலீஸ் செய்யலாம் என நீதிமன்றம் கூறியதோடு, தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மெர்சல் படம் சென்சார்க்கு அனுப்பப்பட்டது  தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அட்லியே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். ‘மெர்சல்’ஐ வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

இந்நிலையில், மெர்சல் படத்தின் ட்ரெய்லர் வரும் 9-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(தமிழ்365 Download Best Android app)-https://goo.gl/YYv7Dr

 

Comments

comments