தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மெர்சல் படம் வரவுள்ளது. படக்குழுவினர்கள் சென்ஸார், டைட்டில் பிரச்சனை என பிஸியாகவே உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு பேனர், போஸ்ட்டர் என தமிழகம் முழுவதும் கலக்கி வருகின்றனர், விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் நல்ல ரசிகர்கள் பலம் உள்ளது.

இப்படத்தை உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் ரிலிஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.இதில் இலங்கையில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் இப்படம் ரிலிஸ் ஆகவுள்ளதாம்.

தற்போது இலங்கையில் படம் வெளிவர இன்னும் 15 நாட்கள் இருக்க, அதற்குள் பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர், இந்த கட்-அவுட் 60 அடி என்று கூறப்படுகின்றது.

அங்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ, கட்-அவுட், போஸ்ட்டர் என ரெடி செய்து வருகின்றனர், தற்போது வெளிவந்துள்ள செய்தி ஒன்று விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

விஜய்க்கு இலங்கையிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர், இதை அனைவரும் அறிந்தது தான், இலங்கையில் ஒரு பகுதியில் விஜய்க்கு பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.

அந்த கட்-அவுட் நேற்று ஒரு சிலரால் உடைக்கப்பட்டுள்ளது, அருகில் இருந்த பேனரும் கிழிப்பட்ட நிலையில் இருக்க, இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.

மெர்சல் படம் பல பிரச்சனைகளில் தற்போது சிக்கியுள்ளது. ஏற்கனவே டைட்டில் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, தற்போது கேளிக்கை வரியால் தீபாவளி முதல் திரையரங்கை வேறு மூடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படி பல தடைகள் ஒரு பக்கம் இருந்தாலும், படக்குழு அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலைகளில் பிஸியாகவுள்ளனர்.

ஆம், மெர்சல் சென்ஸார் வருகின்ற 9-ம் தேதி திங்கள் அன்று நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதை தொடர்ந்து 10 அல்லது 11-ம் தேதிகளில் படத்தின் ட்ரைலரும் வரும் என கூறுகிறார்கள்.

முன்னதாக, தீபாவளிக்கு வெளியாகவுள்ள மெர்சல் திரைப்படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்க ப்ளக்ஸ், பேனர்கள் என ரசிகர்கள் இப்போதே தயாராகி வருவது குறிப்பிடதக்கது.