அட்லீ என்றாலே ‘காப்பி’ என்று அர்த்தம் ஆகிவிட்டது தமிழ் சினிமாவில். மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படத்தை ‘ராஜா ராணி’யாகவும், சத்ரியனை ‘தெறி’யாகவும் எடுத்தவர்.

‘ராஜாராணி’ என்ற தலைப்பும் பழைய தமிழ்ப் படத்தினுடையது. ‘தெறி’, ‘மெர்சல்’ தலைப்புக்கள் கூட வேறொரு உதவி, குறும்பட இயக்குனர்களிடமிருந்து திருடியதுதான் என்ற குற்றச்சாட்டும் அவர் மேல் உண்டு.

atlee
atlee

இயக்குனர் அட்லி மீது ஒரு தரப்பினர் அவர் மற்ற படங்களை பார்த்து படத்தின் கதையை மட்டும் இல்லை டீசர் முதல் படம் வரை காப்பி அடித்துதான் எடுக்கிறார் என்று குறை கூறிவருகின்றனர்.

vijay atlee

இதனால் கொஞ்சம் கோவமான அட்லி அவர்களுக்கு மிக பெரிய சாவல் விட்டு இருந்தார் நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய் ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் உழைப்பு தான் ஒவ்வொன்றும்.

என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு மெர்சல் படத்தில் ஒரு காட்சி இருக்கிறது அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு தெரியும் அதே போல என் திறமை தெரியும் என்று சாவல் விடுத்துள்ளார் மெர்சல் படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை மெர்சல் செய்யும் இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

mersal

தற்போது தன்னுடைய கை விலங்கை போலீஸ் அதிகாரியின் கைக்கே விஜய் மேஜிக் செய்து மாற்றி விடும் காட்சி பிரபல ஹாலிவுட் படமான நவ் யூ சீ மி படத்தில் வந்துள்ள அப்பட்டமான காப்பி என வீடியோ ஆதாரத்துடன் ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

இந்த காட்சி மட்டும் அல்ல, படத்தை பார்த்தால் பல படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் தான் கோர்வையாக இருக்கும். ஆனால், கதையின் கருவும், கருத்தும் கூடவே விஜய்யின் மாஸும் படத்தை இன்று ப்ளாக்பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது மெர்சல்.