தமிழ் சினிமாவில் மெகா ஹிட் நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு பிரம்மாண்ட திருவிழா போல தான் கொண்டாடுவார்கள் என்பது எல்லாருக்குமே தெரிந்த ஒன்று தான்.

தற்போது தெறி படத்தை தொடர்ந்து மெர்சல் படத்தினை அட்லீ இயக்க மிக பிரம்மாண்டமாக தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டீஸர் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் இடைவிடாமல் இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த படத்தில் அணைத்து பணிகளும் முடிந்து விட்டன, 8 வருடங்களாக தொடர்ந்து U தணிக்கை சான்றிதழ் மட்டுமே பெற்று வந்தது, இந்நிலையில் தற்போது மெர்சல் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் ஆளுக்கொரு திசையில் முறுக்கிக் கொண்டு நிற்பதால், சினிமா தனக்குத் தானே மொட்டை அடிக்கிற கண்டிஷனில் இருக்கிறது.

தியேட்டர்கள் பப்பரக்கா என்று திறந்து கிடக்கிறது. ஆனால், ‘ஒரு படத்தையும் ரிலீஸ் பண்ண மாட்டோம்’ என்று அறிவித்திருக்கிறார் விஷால். சரி… தயாரிப்பாளர் சங்கம் படங்களை ரிலீஸ் பண்ணும்போது அவர்கள் தியேட்டரை மூடினால் என்ன செய்வாராம்?

இப்படி ஒற்றுமையில் பிளேடு போட்டு கதற விடும் இவ்விரு சங்கங்களால், முன்னணி படமான மெர்சலுக்கே குடைச்சல்.

வரும் தீபாவளியிலிருந்து ஸ்டிரைக் என்கிற முடிவை தியேட்டர் சங்கம் மாற்றிக் கொள்ளும். ஏனென்றால், இந்த பண்டிகை கால அறுவடையை பகைத்துக் கொள்கிற தைரியம் தியேட்டர்காரர்களுக்கு வரவே வராது.

நிஜம் அப்படியிருக்க… அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் தீபாவளிக்கு எந்த படங்களும் வராது என்று முழங்கிக் கொண்டிருக்கிறாராம் விஷால்.

இந்த விஷயம் அப்படியே விஜய் காதுக்கும் போக… யார் தடுத்தாலும் மெர்சல் தீபாவளிக்கு வரும். அதற்கப்புறம் வர்ற விளைவுகளை சந்திக்க தயார் என்று கூறிவிட்டாராம்.

ஒற்றுமை இல்லாத போராட்டங்கள், உருப்படாமல் போகும் என்பதற்கு விரைவில் ஒரு உதாரணம் கண்ணெதிரே நிகழப் போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here