அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’.இதில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் மற்றும் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

தளபதி விஜய்யின் மெர்சல் படம் வெளிவர இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், படத்திற்கு புதிய சிக்கல் வெடித்துள்ளது. ‘மெர்சல்’ டைட்டில் பயன்படுத்த ‘மெர்சலாயிட்டேன்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் தடை வாங்கியுள்ளார்.

அதனால் படத்தின் டைட்டில் மாறுமா அல்லது பிரச்சனை தீர்க்கப்படுமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அளித்துள்ள பேட்டியில் “ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஆண்டவன் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மெர்சல் படம் வெளியாகும். தீபாவளி கொண்டாட்டம் உறுதி” என கூறியுள்ளார்.