Connect with us

Cinemapettai

என்னது மெர்சல் தோல்வி படமா? ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லும் தயாரிப்பாளர்

mersal-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னது மெர்சல் தோல்வி படமா? ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லும் தயாரிப்பாளர்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் உலகளாவிய மார்க்கெட் நிலவரம் உச்சத்தில் உள்ளது. பல இடங்களில் இதற்கு முன் செய்த வசூலை எல்லாம் ஓரம் கட்டிவிட்டார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்கள் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருந்தாலும் பலரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்னும் இணையதளங்களில் மெர்சல் படம் தோல்வி தான் எனவும், அதனால்தான் தேனாண்டாள் பிலிம்ஸ் தற்போது படங்கள் தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முரளி சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் முரளி, மெர்சல் படம் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

வேறு சில காரணங்களால் மட்டுமே நாங்கள் தயாரிக்க இருந்த தனுஷ் படம், எஸ் ஜே சூர்யாவின் இறவாக்காலம், சங்கமித்ரா போன்ற படங்கள் கைவிடப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சிலர் மெர்சல் படத்தில் சம்பாதித்த அனைத்தையும் கடனை கட்டி விட்டார் போல எனவும் குசலம் பேசுகின்றனர்.

இன்னும் சிலரோ மெர்சல் வெற்றிப்படம் என நீங்கள் தொடர்ந்து அழுத்தி அழுத்தி கூறுவதுதான் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது எனவும் இணையதளங்களில் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதற்காக தான் விஜய் இரண்டாம் முறையாக நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார் எனவும் செய்திகளை பரப்புகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top