vijay

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு மெர்சல் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது.

ஒரு படத்தில் அரசியல் வசனம் இருந்தால் அதில் இருந்து கிளம்பும் சர்ச்சைகளே அந்தப் படத்தை ஜாக்பாட் வசூல் குவிக்க உதவும் என்பதற்கு சான்றாகி இருக்கிறது மெர்சல் திரைப்படம்.இதற்க்கு காரணம் படத்தின் சர்ச்சை கருத்துகளே.

ஒரு வாரத்தில் மட்டுமே அந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 200 கோடி அள்ளி வசூலில் சாதனை படைத்துள்ளது.

mersal

ஒரு திரைப்படம் எப்படி அதிகம் பேரால் பேசப்படும் என்பதற்கு அதில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை வைத்தாலே போதுமானது. அதிலும் அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் படத்திற்கு விளம்பரமே தேவையில்லை.

மெர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸ் அதை உணர்ந்திருக்கும். ரூ. 80 கோடி பட்ஜெட்டில் மெர்சல் படம் திட்டமிடப்பட்டு அது ரூ. 130 கோடி வரை எட்டியதால் போட்ட பணம் கிடைக்குமா என்று களக்கத்தில் இருந்தனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.

mersal

ஆனால் அவர்களின் கவலையை போக்கியது மெர்சல் படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை. படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா வசனத்தை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியது.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் இதனால் வசூல் பாதிக்குமோ என்று அஞ்சி தேவைப்பட்டால் அந்த வசனங்களை நீக்கத் தயார் என்று சொன்னது.ஒருவழியாக பிரச்சனை அனைத்தும் முடிந்தது மேலும்.

mersal-box

இதை தொடர்ந்து மெர்சல் ரூ. 200 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறி வருகின்றனர். இதில் கேரளாவில் மட்டும் மெர்சல் தற்போது வரை ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இதுவரை கேரளாவில் வந்த தமிழ் படங்களிலேயே அதிகம் வசூல் செய்தது மெர்சல் தான் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார்.