நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 61ஆவது திரைப்படமான இப்படத்தை, இளம் இயக்குநர் அட்லீ இயக்குகிறார்..

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படமான மெர்சல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில், மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு, டீசர் வெளியிடப்பட்டது.

இயக்குநர் அட்லியின் பிறந்தநாளையொட்டி, இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு டீசர் வெளியானதிலிருந்து 30 நிமிடங்களுக்குள்ளாக, யூடியூப்பில், 5 லட்சம் முறைக்கு மேல் மெர்சல் டீசரை பார்த்து ரசித்துள்ளனர். சென்னை மக்கள் பேசும் மொழிவழக்கில், ‘மெர்சல்’ என்பதற்கு அச்சதோடு மிரள்வது என்பது அர்த்தமாகும்.

வெளியான ஒரேநாளில் ஒரு கோடி பேர் ‘மெர்சல்’ டீசரை பார்த்தனர். தவிர யூடியூப் லைக்ஸ் ஏழேகால் லட்சம் என உலக சாதனை படைத்தது. இந்தப் படம் தீபாவளிக்கு அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தேனாண்டாள் நிறுவனம், படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளிவரவிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீஸர் உலகிலேயே அதிக டிஸ்லைக் (Dislike) பெற்று சாதனை படைத்துள்ளது.

தெறி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் 3 வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’ தீபாவளியன்று திரைக்குவரவுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு இருப்பதை சொல்லி அறிய வேண்டியது இல்லை.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு சான்றாக சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீஸர் பல சாதனைகளை புரிந்து வருகிறது. உலகிலேயே அதிக லைக் பெற்ற டீஸர் என்கிற பெருமையினை பெற்ற இத்திரைப்படத்தின் டீஸர், தற்போது 195k டிஸ்லைக் பெற்று, இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற டீஸர் என்கிற பெயரினையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வந்த DJ படத்தின் டீஸர் தான் 186k டிஸ்லைக் பெற்று முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது. இணையத்தில் இந்த டீஸரை இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. விஜய்-அஜீத் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் போட்டிகளால் அஜீத் ரசிகர்களே அதிக டிஸ்லைக் கொடுத்து வருவதாக விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

படத்தில் சமந்தாவின் டப்பிங் மட்டும் நிறைவடையாமல் இருந்து வந்தது, சமந்தா திருமண பிஸியில் இருப்பதால் அவர் வரவில்லை என்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பணியை முடித்து விடலாம் என அட்லீ திட்டம் போட்டுள்ளார்.

இதனை அறிந்த சமந்தா சென்னை விரைந்து வந்து தனது டப்பிங்கை நேற்று முடித்துள்ளார், இந்த செய்தி பார்சிலோனாவில் உள்ள விஜய்க்கு தெரிய அவர் உடனே சமந்தாவை தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.