Connect with us

Cinemapettai

எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லீ சார்..! – ரசிகர்கள் கேள்வி

Cinema News | சினிமா செய்திகள்

எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லீ சார்..! – ரசிகர்கள் கேள்வி

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா எனப் பல நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாகயிருக்கிறது மெர்சல். ‘தெறி’ படத்துக்குப் பிறகு, ‘மெர்சல்’ மூலம் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கியிருக்கிறார், இயக்குநர் அட்லி.

‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’ படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களின் லைக்ஸை வாங்கியிருப்பதால், பாடல்களின் விஷுவலைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்ததால், ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் படத்துக்கான இரண்டு புரொமோ வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் மெர்சலுக்கு சில சோதனை வந்தது. அண்மையில் படத்தின் மெர்சல் பெயருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது தீர்ந்துள்ளது.

அதோடு படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்து படக்குழுவையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளனர்.பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்ய இருக்கும் இப்படத்தின் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அதுவும் ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் TSL படுபயங்கரமாக செயல்பட்டு வருகிறது. நேற்று நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஜே.சூரியா ஆகிய இருவரும் இருப்பது போல ஒரு போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் நடிகர் எஸ்.ஜே.சூரியா அநேகன் படத்தில் தோன்றும் நவரச நாயகன் கார்த்தி போல இருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் அட்லியிடம் வில்லன் எஸ்.ஜே.சூரியான்னு சொல்லிட்டு நவரச நாயகன் கார்த்திய கட்டுறீங்க..? எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லி சார்..! என்று ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top