mersal

விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

mersal

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் எவ்வளவு பெரிய அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது என்பது உங்களுக்கே தெரியும்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல எதிர்ப்புகளுக்கு நடுவிலும் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

இந்த படத்தின் வசூல் 225 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது.

mersal-box

விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தென் இந்திய நடிகர்களில் அதிக வசூல் குவித்தது விஜய் படம் தான் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.

அதிகம் படித்தவை:  தெறி இத்தனை கோடி வசூல் உண்மையா? அதிர்ந்த திரையுலகம்

‘மெர்சல்’ படம் 28 நாட்களையும் கடந்து ரசிகர்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள், திரை உலகத்தினர் உள்பட அனைவரும் இந்த படத்தை வரவேற்றுள்ளனர். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய்யும் நன்றி தெரிவித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸிலும் படம் ரூ 225 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திவிட்டது.

mersal vijay
mersal vijay

இப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவிற்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை வீட்டில் படகுழுவினருக்கு விருந்து வைத்துள்ளார். இதில் அட்லீ, ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டனராம்.

அதிகம் படித்தவை:  இணையதளத்தில் தீயாய் பரவும்.!டானாக வரும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்.!

 

 

விஜய் விடுமுறையை கொண்டாட சமீபத்தில் வெளிநாடு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய், ‘மெர்சல்’ பட இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய் சென்று இருந்தனர்.

துபாயில் உள்ள பாலம் தீவுக்கு சென்ற அவர்கள் ‘மெர்சல்’ பட வெற்றியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ‘மெர்சல்’ தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுவதையொட்டி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

mersal

மேலும் அவர்களை தன்ன்னுடைய சொந்த செலவில் துபாய் அழைத்து சென்றுள்ளாராம் தளபதி.

விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.