fbpx
Connect with us

மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம் -எடிட்டர் மிகவும் வருத்தம்

News / செய்திகள்

மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம் -எடிட்டர் மிகவும் வருத்தம்

தீபாவளிக்கு தளபதியின் படம் வருகிறது, அதிரடி சரவெடியாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் மாஸ் பிளான் போட்டு வருகின்றனர்.

இதற்கு நடுவில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்குகள் ஒன்று சேர்ந்து வரி பிரச்சனை காரணமாக கடந்த வாரம் எந்த படத்தையும் ரிலீஸ் செய்யவில்லை.

இன்னும் வரி சம்பந்தப்பட்ட பிரச்சனை முடியவில்லை என்பதால் ரசிகர்கள் கடும் பயத்தில் இருக்கின்றனர். விஜய்யின் மெர்சல் படம் வெளியாகுமா இல்லை தள்ளிப்போகுமா என்று தான் பயம்.

vijay mersal

ஆனால் விஜய் கண்டிப்பாக தீபாவளிக்கு மெர்சல் படம் வரும் என்று தெளிவாக கூறியிருக்கிறாராம். சோ விஜய் ரசிகர்களே தளபதியே சொல்லிட்டாராம் அப்புறம் என்ன கொண்டாட்டம் தான்.

இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மெர்சல் படத்தின் போஸ்டர்கள், பேனர்கள், கட்டவுட் என பல இடங்களில் காணமுடிகிறது. இந்த தீபாவளி அவரின் ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளி தான்.

mersal vijay

படத்திற்காக மிகவும் காத்திருக்கும் வேளையில் ஏதாவது குழு கிடைக்காதா என ஏங்குவோரும் உண்டு. படம் பற்றி சில விஷயங்களை இப்படத்தின் எடிட்டர் ரூபன் நேரலையில் பகிர்ந்துள்ளார்.

இதில் மெர்சல் படத்தின் ஃபைட் சீன்களை அனலரசு அமைத்திருக்கிறார். இந்த சண்டைகள் காட்சிகள் ஸ்டைலிஷாக இருக்கும்.மெர்சல் படம் எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

mersal-vijay

நானும் ரசித்தேன். இனி ட்ரைலர் வரவாய்ப்பு இல்லை. ஏற்கனவே டீசரை வெளியிட தாமதமாகிவிட்டது. அதுதான் காரணம். ஆனால் புரமோஷனுக்காக இனி புரமோ வீடியோக்கள் வரும்.

படத்தில் சில காமெடி காட்சிகளை படத்தின் நேரம் கருதி நீக்கிவிட்டோம். எனக்கும் வருத்தமாக இருந்தது. கொஞ்சம் ஹுயூமர் போய்விட்டது. இதெல்லாம் படம் வெளிவந்த பிறகு டெலிட்டட் சீன்களாக வெளிவரும் என அவர் கூறினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top