மெர்சல் படம் குறித்து காட்டு தீயாக பரவிய புது வதந்தி – தயாரிப்பாளரின் அதிரடி பதில்

விஜய்யின் மெர்சல் வெளியாவதில் ஏகப்பட்ட பிரச்சனையை வந்துகொண்டே இருக்கிறது ஒருபக்கம் ‘மெர்சல்’ என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பை போன்றே உள்ளது. என ராஜேந்திரன் கூறி வருகிறார்.

இதற்கிடையில் சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட உள்ளாட்சி வரிக்கு எதிராக 6 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் சென்னையில் உள்ள சில மல்டிப்ளெக்ஸ்கள் மூடப்பட்டுள்ளன.இதனால் தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஜல்லிக்கட்டு வீரராக வரும் சீனியர் விஜய், எப்படி மாடுபிடிக்கிறார் என்ற காட்சியை காளைமாடுகளை வைத்து படமாக்கியுள்ளார்கள்.இப்படி விலங்குகளை பயன்படுத்தி படம்பிடிக்கும்போது விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் ‘மெர்சல்’ படக்குழு அப்படி மருத்துவர்களை வைத்து படம்பிடிக்கவில்லை. அதனால் அவர்களிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த சான்றுடன்தான் படத்தை சென்சாருக்கு அனுப்புவது வழக்கம் என்பதால் படத்தை சென்சாருக்கு அனுப்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால் தீபாவளிக்கு இன்னும் 12 தினங்களே உள்ள நிலையில் அக்டோபர் 18 அன்று படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றும் செய்தி வெளியானது.

இந்த தகவல்கள் குறித்து ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி கூறியதாவது,“எங்கள் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு, விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் இல்லாமல் நடந்தது என்று சொல்வது தவறான செய்தி.

விலங்குகளை பயன்படுத்தி எடுக்கப்படும் காட்சிகளை படம்பிடிக்கும்போது கால்நடை மருத்துவர்கள் அருகாமையில் இருக்க அவர்கள் துணையோடுதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது ‘மெர்சல்’ படத்துக்கான அனுமதி சான்றிதழை விலங்குகள் நல வாரியம் கொடுத்து விட்டது.

அடுத்து படத்தை சென்சாருக்கு சமர்பிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறோம். தீபாவளிக்கு திட்டமிட்ட படி மெர்சல் படம் மெர்சலாக வெளியாகும் என அதிரடியாக கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: