விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த, மெர்சல் படம், பெயருக்கு ஏற்றார்போல், ரசிகர்களை மட்டுமின்றி, அப்படக் குழுவினரையும் மெர்சலாக்கியது.

‘சட்டமன்றம் ஏங்குகிறது; பாராளுமன்றம் பதறுகிறது’ என, ‘பஞ்ச்’ வசனங்களுடன் கூடிய பேனர், ‘கட் – அவுட்’கள், தியேட்டர்களை அலங்கரித்தன.

rajini kala

இவை கூடிய விரைவில், சென்னை, தலைமை செயலகத்தையும் அலங்கரிக்க வேண்டும் என்பதே, விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு, மத்திய அரசுக்கு எதிரான, ஜி.எஸ்.டி., மற்றும், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் குறித்த வசனம், படத்தில் இடம் பெற்றதே காரணம்.

இந்நிலையில், ‘இதற்கே மெர்சலானால் எப்படி; ரஜினி நடிக்கும், காலாவில், இதை விட பெருசா இருக்கே’ என, அப்பட இயக்குனர், ரஞ்சித் கூறியுள்ளது, ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

mersal

மதுரையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, ரஞ்சித், மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், மக்களின் பிரதிபலிப்பு என, கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், மெர்சல் படக்காட்சிகள், எதையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரஜினி நடித்து வரும், காலா படத்திலும், அரசியல் குறித்த வசனங்கள் உள்ளன. படம், 2018 ஏப்ரலில் வெளியாகும் என்றார்.

சமீபத்தில், அரசியலுக்கு வருவது குறித்து, ரசிகர்களுடன் கலந்துரையாடிய ரஜினி, ஒவ்வொரு தரப்பிலும் கருத்து கேட்டு வருகிறார்.

pa-ranjith

விரைவில் வெளியாக உள்ள, 2.0 மற்றும், காலா படத்தை முடித்த கையோடு, ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அதற்கு, வலு சேர்க்கும் வகையில், காலா படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

சமூக கருத்துகளை தைரியமாக கூறுபவர் ரஞ்சித்; அதனால், காலா படம், மெர்சலை விட, ‘மாஸ்’ காட்டும் என்கின்றனர், ரஜினி ரசிகர்கள்.