மெர்சல் படத்துக்கு எதிராக கிளம்பிள்ளவர்களின் பட்டியலில் தற்போது டாக்டர்களும் இணைந்துள்ளனர்.

விஜய்யின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்துக்கு மக்கள் மத்தியிலும் ஆதரவு இருப்பதால் வசூலை குவித்து வருகிறது.

mersal vijay
mersal vijay

இதற்கிடையே படத்துக்கு; பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

மெர்சல் படம் வெளிவரும் முன்பே ஆரம்பித்த சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடில்லை! பட டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என ஒருவர் ஆரம்பித்து வைத்தார்.

பிறகு டீசர் வந்தபோது விலங்குகள் நல வாரியத்தில் கிடுக்கிப் பிடி போட்டனர். ஒருவழியாக கடைசி நேரத்தில் தடையில்லா சான்று கொடுத்தனர்.

படம் ரிலீஸ் ஆனபிறகு; ஜி.எஸ்.டி குறித்த வசனம், அரசியல் தாக்கு போன்ற காரணத்தால் அரசியல் கட்சியின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது.

mersal-box

மெர்சல் படத்துக்கு எதிராக கிளம்பிள்ளவர்களின் பட்டியலில் தற்போது டாக்டர்களும் இணைந்துள்ளனர்.

மருத்துவத்துறை வெறும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதாக மெர்சல் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளாத கூறி; இப்படத்துக்கு எதிராக மருத்துவர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்ட துவங்கியுள்ளனர்.

இதற்காக அவர்கள் போர்க்கொடி தூக்கிப் போராட்டம் செய்யாமல் தங்களது எதிர்ப்பை நூதனமான முறையில் கட்டுகின்றனர். இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான மெர்சல் படத்தை; சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

mersal

இதுகுறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ரவிசங்கர் கூறுகையில்:

மெர்சல் படத்தில் ஒட்டு மொத்த மருத்துவமனைகளும் பணம் சம்பாதிக்க இந்த மருத்துவ துறையை பயன்படுத்துவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு நாங்கள் மீடியாக்களுக்கோ, கோர்ட்க்கோ செல்ல விரும்பவில்லை.

அது மேலும் இப்படத்துக்கு விளம்பரத்தை தேடித்தரும். அதனால் இணையத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் லிங்க்களை சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு பகிர்ந்து வருகிறோம்,

இப்படி செய்வதன் மூலமாக அது படத்தின் வசூலை நேரடியாக பாதிக்கும், அப்போது தான் அவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள் என்றார்