மெர்சல்’ விஜய் ஜோடியாக நடித்துள்ள மூன்று நாயகிகளில் தனது கதாபாத்திரம் என்னவென்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் மனம் திறந்திருக்கிறார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் `மெர்சல்’.அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.

vijay mersal

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் `மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று நம்பப்படுகிறது.

Thalapathy Vijay with Gogo Requiem

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து மூன்று நாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வால் மனம் திறந்திருக்கிறார். இதுகுறித்து காஜலிடம் கேட்ட போது…

“இந்த படத்தில் எனக்கும் விஜய்க்கும் காதல் காட்சிகள் நிறைய உள்ளன. கதைப்படி டாக்டர் வேடத்தில் வரும் விஜய் ஜோடியாக நடித்திருக்கிறேன். நானும் மருத்துவத் துறையில் உள்ள ஒரு பெண்ணாக நடித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

kajal aggarwal still
kajal-aggarwal

இந்நிலையில் வரியை நீக்குவது குறித்து திரைப்படத்துறையினர் நேற்று அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாளில் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் தீபாவளிக்கு திட்டமிட்டப்படி மெர்சல் படம் வெளியாகுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.