fbpx
Connect with us

Cinemapettai

மெர்சல் படத்தை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்.! என்ன சொன்னார் தெரியுமா.!

News | செய்திகள்

மெர்சல் படத்தை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்.! என்ன சொன்னார் தெரியுமா.!

விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.

மெர்சல் திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன் பேசும்போது, “சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. அங்க மருத்துவம் இலவசம். ஆனால், 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்கும் இங்க இலவசமாக மருத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை” என்று வசனம் பெறுவதாக ஒரு காட்சி இடம்பெற்றது.

mersal

இந்த காட்சிக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “சட்டங்களை மதிக்காமல் திரைப்படம் எடுக்கிறீர்கள். பிறகு சட்டத்தைப் பற்றியும் வரியைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள்.

“தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜி.எஸ்.டியைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம்? இம்மாதிரி கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது,” என்று தமிழிசை கூறினார்.

mersal vijay

mersal vijay

மேலும், “நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளம் குறித்து மக்களிடம் நேர்மையாக சொல்ல முடியவில்லை. அதற்கு நேர்மையாக வரி கட்ட முடியவில்லை.

இப்படிப்பட்டவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் பிரதமரின் திட்டத்தை குறைகூற முடியாது,” என்றும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் தமிழிசை கூறினார்.

மெர்சல் திரைப்படத்தில் இந்தக் காட்சி மட்டுமல்லாமல், வடிவேலு நடித்துள்ள மற்றொரு காட்சியில், வெளிநாட்டில் பர்ஸை திருடும் கொள்ளையர்களிடம் “ஐ ஆம் இந்தியா. அங்கே இப்போ டிஜிட்டல் மணி, சோ நோ மணி” என்று அவர் கூறுவதைப் போல உள்ள காட்சியும் பா.ஜ.கவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

mersal

இந்த எல்லா பிரச்சனையையும் முடிந்து திரையரங்கில் இன்னும் வெற்றி நடை போடுகிறது .

தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று (நவம்பர் 10) வெளியாகியது.

nenjil thunivirunthal

இந்த நிலையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மெர்சல் படத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? என தொகுப்பாளர் ஒருவர் இயக்குனர் சுசீந்திரனிடம் கேட்டார்.

அதற்கு சுசீந்திரன் ‘இனி டிரிப்பிள் ஆக்‌ஷன் படம் எப்படி எடுக்க கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்’ என ஜாலியாக கூறியுள்ளார். மேலும் வைரமுத்து இயக்குநர் சுசீந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

nenjil-thunivirunthal

நெஞ்சில் துணிவிருந்தால்’ இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி.

தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரை அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை. அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வெளிவருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top