தளபதி விஜய் மூன்று வேடங்களில் அசத்தும் மெர்சல் படம் தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ள உள்ளது. விஜயின் மெர்சலை வரவேற்க ரசிகர்கள் பேனர், கட் அவுட் என உலகம் முழுவதும் கொண்டாட உள்ளனர்.

உலகம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மெர்சல் ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது பாரிஸில் உள்ள Grand Rex திரையரங்கில் இந்த படம் வெளியாகவுள்ளது தான் ஆச்சர்யம்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கம் இது என்பதால் தான் அது. ஒரே நேரத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய Grand Rex திரையரங்கில் அக்டோபர் 18ம் தேதி மெர்சலாக வெளியாகவுள்ளது தளபதியின் மெர்சல். இந்த அறிவிப்பை Grand Rex தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, இந்தியாவின் மிக பிரமாண்ட படைப்பான பாகுபலி 2 ஆகிய படங்கள் இங்கு திரையிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் ஸ்ட்ரிக் விஷயம் தீபாவளிக்குள் முடித்து விடுவார்கள் என்பதால், படம் ரிலீஸ் எந்த விதத்திலும் தடைபடாது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மெர்சல் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் அழைப்பு விடுத்துள்ளனர்.விவேகம் பட நடிகரை..! – யார் தெரியுமா?

அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, ஆனால், இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் ரசிகர்களை கவர்ந்தது.

இதில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர் Serge Crozon. இவர் ப்ரான்ஸ் நாட்டை சார்ந்தவர்.

விவேகம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த இவரை, மெர்சல் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

கண்டிப்பாக இவர் மெர்சல் படத்தின் முதல் காட்சி பார்க்க வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.