தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு அன்று சென்னையில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

ரகுமானின் இசை கச்சேரியுடன் மெர்சல் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, மேலும், இதில் விஜய் மற்றும் ரகுமான் திரைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் உள்ளதாம்.

மெர்சல் படத்தின் பட்ஜெட் ரூ 130 கோடியிலிருந்து ரூ 135 கோடி வரை உயர்ந்துவிட்டதாம், எப்படியும் படம் வருவதற்குள் ரூ 150 கோடி வரை பட்ஜெட் வரும் என தெரிகின்றது.

இதுமட்டுமின்றி விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்ற படம் மெர்சல் தானாம்