`மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு, மருத்துவத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கும் டாக்டர்கள்… இப்படி அரசியல், சமூகம் சார்ந்த சில வசனங்கள் வரும்.

அதற்கு அரசியல் தளத்தில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. `சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்’ என்கிறார் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

mersal vijay
mersal vijay

`நூறு டாக்டர்களில் பத்துப் பேர் இப்படி மருத்துவத்தை பிசினஸாகப் பயன்படுத்துவர். அது தவறு என்று புரிபவர்களுக்கே நான் சொல்வது கோபத்தை உண்டாக்கும்” என்று இதில் ஒரு வசனம் வரும்.
அதுபோல, ‘தாம் செய்வதெல்லாம் தவறுதான்.

அவையெல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன’ என்ற எண்ணம் உடையவர்களுக்கு மட்டும்தான் தனது கொள்கைகளை விமர்சிக்கும்போது கோபம் வரும்.

மெர்சல் படம் கடந்த ஒரு வாரமாக திரை உலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெர்சல் படத்தில் ஆட்சே பகரமான வசனங்கள் நீக்கப்படுமா? என்ற நிலையும் ஏற்பட்டது.

mersal

மெர்சல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழில் வெளியான இந்த படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் ‘மெர்சல்’ படக்குழுவினர்களுக்கும், விஜய்க்கும் ஆதரவாக ராகுல்காந்தி உள்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களும், ஒட்டுமொத்த திரையுலகமும் ஆதரவு கொடுத்ததால் பாஜக தலைவர்கள் பின்வாங்கினர்.

mersal

இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை அனுமதித்த தணிக்கை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் ‘மெர்சல்’ படத்திற்கு தரப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. நாளைய விசாரணையின்போதுதான் இந்த படம் மீண்டும் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தடை செய்யப்படுமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும்.