Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாதனை முயற்சியில் மெர்சல் நாயகி… ரசிகர்கள் வாழ்த்து

சாதனை முயற்சியில் மெர்சல் நாயகி
மெர்சல் நாயகி நித்யா மேனன், ப்ரணா என்று பெயரிடப்பட்டுள்ள மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். வி.கே.பிரகாஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நித்யா மேனன் மட்டுமே நடிக்கிறார் என்பது தனிச்சிறப்பு.

Nithya-Menen
சாதனை முயற்சியாக ஒரே ஒரு கேரக்டர் அல்லது இரண்டு கேரக்டர்கள் கொண்டு இதுவரை படங்கள் எடுக்கப்பட்டிருக்கிலாம். ஆனால், அப்படி வெளியான படங்கள் முன்னணி டெக்னீஷியன்கள் பணியாற்றியதில்லை. ஆனால், அந்த விதிமுறைகளை உடைத்துள்ள ப்ரணா மலையாளப் படம். இயக்குநர் பிரகாஷ் புதுமுகம்தான் என்றாலும், படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது தேசிய விருதுகள் வென்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். அதேபோல், சவுண்ட் இன்ஜினியரிங் வேலைகளை ஆஸ்கர் வென்ற டெக்னீஷியனான ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொள்கிறார். இதனால், படத்துக்காக எதிர்பார்ப்பு எகிறக் கிடக்கிறது.
இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஷூட் செய்யப்படுகிறது. இதனால், ஒரு காட்சியைத் தொடர்ந்து 4 முறை நடித்துக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நித்யா மேனன். மலையாளப் படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில், மற்ற மொழிகளில் அவர் கவனம் செலுத்தி வந்தார். தாய் மொழியான மலையாளம் தவிர மற்ற 3 தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நாயகர்களுடன் அவர் நடித்துள்ளதால், ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இந்த ஒரு காரணம் மற்றும் அவரின் நடிப்புத் திறன் ஆகியவையே ப்ரணா வாய்ப்பை நித்யாவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது.
முழுக்க முழுக்க ஒரே ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி நிகழும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஆடியன்ஸுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்கிறார் நித்யா மேனன். அவரது நம்பிக்கை வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டார். நித்யா மேனனின் முகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது. இதனால், படக்குழுவினர் ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
