தணிக்கைச் சான்றிதழும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.கேளிக்கை வரிக் குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினை முடிவுற்றதால் ‘மெர்சல்’ வெளியீடு உறுதிசெய்யப்பட்டது.

ஆனால், தணிக்கைக் குழுவினருக்கு விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் ‘மெர்சல்’ மீண்டும் வெளியீட்டு பிரச்சினையில் சிக்கியது. இதனால் முன்னணி திரையரங்குகள் எதிலுமே ‘மெர்சல்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாததால் சிக்கல் உருவானது.

mersal nithya menon

நேற்று ‘மெர்சல்’ படத்தைப் பார்த்த விலங்குகள் நல வாரிய அமைப்பினர் எச்சரிக்கையோடு கூடிய அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தணிக்கைப் பணிகள் தொடங்கியது. ஆனால், நேற்று அப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால், இன்று காலை முதலே அப்பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.

தணிக்கைச் சான்றிதழ் நிறைவடைந்தால் மட்டுமே, டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என பல திரையரங்குகள் காத்திருந்தன. இறுதியாக 4 மணியளளில், ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு.

mersal

இதனைத் தொடர்ந்து திரையரங்குகளுக்கு க்யூப்பில் பதிவேற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரச்சினைகளையும் கடந்து நாளை (தீபாவளி தினத்தன்று) ‘மெர்சல்’ வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சல் படத்தின் எதிர்ப்பார்ப்பு வேற லெவலில் உள்ளது. ரசிகர்கள் எப்போது படத்தை பார்ப்போம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

mersal

இந்நிலையில் மெர்சல் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 51 நிமிடமாம், இதில் இரண்டு காட்சிகள் மட்டும் கட் செய்யப்பட்டுள்ளதாம்.மேலும், படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 28 நிமிடம், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 23 நிமிடம் இருக்கும் என கூறப்படுகின்றது.

தமிழகம் முழுதும் பெரும்பாலான அரங்குகள் முன்பதிவை தொடங்கிவிட்ட நிலையில், சில திரையங்குகள் இன்னும் முன்பதிவை துவங்காமல் பொறுமை காத்து வருகின்றன. விரைந்து முன்பதிவை தொடங்கவேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.