அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தீபாவளி ரிலீஸாக ‘மெர்சல்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு பிரச்னைகள் ‘மெர்சல்’ படத்தை வெளியிடவிடாமல் தொடர்ந்து துரத்தி வருகிறது. படம் வரட்டும் நாம கணக்கு போடலாம் என்று கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. 3000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது என்ற பெருமையுடன் வெளிவந்த விவேகம், ஸ்பைடர் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பலமாக விமர்சிக்கப்பட்டன.

mersal

ஆனால், இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகவும் சொன்னார்கள். 50 நாளைக் கடந்துள்ள விவேகம் 200 கோடியைத் தாண்டியது என்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விவேகம் படம் 200 கோடி ரூபாயைக் கடந்தது என்றால் அட்லீ, விஜய், ஏஆர் ரகுமான் கூட்டணியில் வெளிவர உள்ள மெர்சல் எவ்வளவு கோடியைக் கடக்கும் என விஜய் ரசிகர்கள் இப்போதே கணக்கு போட ஆரம்பித்தார்கள்.

vijay mersal

உலகம் முழுவதும் சுமார் 3292 தியேட்டர்களில் மெர்சல் வெளியாவதாக அறிவித்துவிட்டார்கள். அப்படியென்றால் முதல் நாள் வசூல் எவ்வளவாக இருக்கும். இதோ, ஒரு தோராய கணக்கு….

3292 தியேட்டர்களில் ஒரு தியேட்டரில் ஒரு நாளைக்கு தலா 4 காட்சிகள் என்றால் மொத்தம் 13168 காட்சிகள். ஒரு காட்சிக்கு சுமார் 300 டிக்கெட் விற்றால் கூட 39,50,400 டிக்கெட்டுகள்.

mersal

ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 79,00,80,000 ரூபாய். அதாவது 79 கோடி ரூபாயை மெர்சல் முதல் நாளில் வசூலிக்கும்.

கூட குறைய சேர்த்துக் கொண்டாலும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதல் நாளில் வசூலிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது தமிழ்த் திரையுலகத்தில் புதிய சாதனை, நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.