விஜய்யின் மெர்சல் படம் எப்படிப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் வெளியானது என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் 2 நாட்களில் படத்தின் வசூல் ரூ. 150 கோடியை தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெர்சல் விஜய் படம் என்பதையும் தாண்டி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்திற்காக நிறைய வித்தியாசமான புரொமோஷன் வேலைகள் செய்தனர், அதில் ஒன்று டுவிட்டர் எமோஜி. மெர்சல் என்று போட்டாலே விஜய்யின் படம் வந்துவிடும், இதனை ரசிகர்களும் மிகவும் கொண்டாடினர்.

mersal

‘மெர்சல்’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் விஜய். அதில், மேஜிக் நிபுணராக நடித்த வெற்றி கேரக்டர், எல்லோராலும் பாராட்டப்பட்டது. ‘உலகிலேயே தலைசிறந்த மேஜிக் கலைஞர்’ என்று படத்தில் புகழப்பட்ட இந்த கேரக்டரில் நடித்த விஜய், உண்மையிலேயே மேஜிக் காட்சிகளில் அசத்தி இருப்பார்.

விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்த மேஜிக்மேன், ‘கற்றுக் கொடுப்பதை உடனடியாகப் புரிந்து கொண்டு ஆச்சர்யப்படுத்துகிறார். நான் சொல்லிக் கொடுத்ததைவிட சிறப்பாகவே விஜய் செய்கிறார்’ என்று வியந்து பாராட்டினார்.

mersal vijay
mersal vijay

மேஜிக் காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஹேமா ருக்மணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.