mersal audio teaser 1

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் ரிலீஸாகி இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் வாங்க முடியாமல் தேனாண்டாள் பிலிம்ஸ் திணறி வருகிறது. விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று கொடுக்காததால் இன்னும் சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படவில்லை.

இந்த மொத்த சர்ச்சைக்கும் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. மெர்சல் படத்தின் ஷூட்டிங்காக பல விலங்குகள் மற்றும் பறவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

mersal magic
mersal magic

ஷூட்டிங் செய்வதற்கு முன்னால் AWBIயிடம் இருந்து அதற்கு அனுமதி வாங்கவேண்டும். சில விலங்குகளுக்கு மட்டும் மெர்சல் டீம் அதை பெற்றுள்ளனர்.

தயாரிப்பு செலவை குறைக்கும் வகையில் ஒருமுறை பின்னி மில்லில் அனுமதி பெறாமல் சில விலங்குகள் மற்றும் பறவைகள் ஷூட்டிங்கில் பயன்படுத்தி தகிடுதத்தோம் வேளையில் ஈடுபட்டுள்ளது மெர்சல் படக்குழு.

அதிகம் படித்தவை:  தெறி ஓப்பனிங் வசூல் சாதனையை முறியடித்த 24
vijay mersal

விஷயம் தெரிந்து விலங்குகள் நல வாரியம் ரெய்டு நடத்தியுள்ளது, ஆனால் அந்த விலங்குகளை ரெய்டுக்கு சற்று நேரத்திற்கு முன்னர் ரகசியமாக வெளியில் அனுப்பிவிட்டனர். ஆனால் பறவையின் இறகுகள் மற்றும் எச்சம் அங்கு இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர் பிரச்சனையை உணர்ந்து மெர்சல் டீம் AWBIயிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் “ஷூட்டிங் முடிந்தபிறகு ஏன் விண்ணப்பிக்கிறீர்கள்?”என கேட்டு விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.

அதிகம் படித்தவை:  மேடையிலேயே விஜய்யிடம் கெஞ்சிய ரோபோ ஷங்கர்.! எதற்கு தெரியுமா
mersal

பின்னர் தவறை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர் முன்னர் எடுத்த காட்சிகள் பயன்படுத்தப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக விலங்குகள் சப்ளை செய்தவர்கள் ஓடிவிட்டனர் அதனால் அவர்களின் விவரங்கள் தெரியாது என மெர்சல் டீம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத விலங்குகள் நல வாரியம் அனுமதி மறுத்துள்ளது. மேலும் இந்திய நாகம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் அதற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் வாரியம் தெரிவித்துள்ளது.

படத்தில் பயன்படுத்தியது கிராபிக்ஸ் என நிரூபித்து, இந்த பிரச்சனைகளை தீர்த்தால் மட்டுமே NOC சான்றிதழ் கொடுக்கப்படும் என தெரிகிறது.