தற்போததைய தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடியன் என்றால் வெகு சிலரே இருப்பர். அதில் யோகி பாபுவும் ஒன்று.

Yogi-Babu

அடுத்தடுத்து பல படங்களில் ஒரே மாதிரியாக ரோலில் நடித்தாலும் ஆடியன்சை போர் அடிக்காமல் பார்த்துக் கொள்பவர் யோகி பாபு.

மெட்ரோ, காக்கா முட்டை, ரெமோ, மான் கராத்தே என பல படங்களில் தனது காமெடியான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் யோகிபாபு.

vijay

சமீபத்தில் வெளிவந்த தளபதியின் மெர்சல் படத்திலும் கமெடியனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் ஒரு வசனத்தை தான், தான் தளபதிக்கு கூறியதாகவும் அதனை எந்த தயக்கமும் இல்லாமல் விஜய் ஏற்றுக்கொண்டதாகவும் நெகிழ்ச்சியாக கூறுகிறார் யோகி பாபு.

மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் சமந்தா, விஜயிடம் ‘டேய் தம்பி, இங்க 5 ரூபா டாக்டர் யாருடா’ எனக் கேட்பார், அதற்கு விஜய், இங்க யார் ஹேண்ட்சமா இருக்கங்களோ அவங்க தான் 5 ரூபா டாக்டர் என்பார், அடுத்து உடனடியாக ‘யோகி பாபு அப்ப நீ தான் பா, போ என விஜயிடம் கூறுவார்’

vijay

இதில், வரும் ‘அப்ப நீதான் பா போ’ எனக் கூறும் அந்த டையலாக்கை நான் தான் விஜய் சாருக்கு சொன்னென், நான் சொன்ன உடன் அதனை ஏற்றுக் கொண்டார், அவ்வளவு பெரிய நடிகர், நான் ஒரு சின்ன ஆர்டிஸ்ட், நான் சொன்னதை உடனடியாக கேட்டு அதனை படத்திலும் வைத்தார், உண்மையிலேயே விஜய் சார் சூப்பர் என மனம் நெகிழ்ந்தார் யோகி பாபு.