fbpx
Connect with us

மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகசெய்தி. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

News / செய்திகள்

மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகசெய்தி. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் மெர்சல். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. தவிர ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

twitter

இந்நிலையில், இந்தப் படத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ட்விட்டர், சோனி நிறுவனத்துடன் இணைந்து மெர்சல் எமோஜி வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ம் தேதி மிக பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.

twitter

அந்த எமொஜியில் மெர்சல் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்லை வைத்து வடிவமைத்திருக்கிறார்கள். தமிழ்ப் படம் ஒன்றுக்கு ட்விட்டரில் எமோஜி வந்திருப்பது இதுவே முதன்முறையாகும். இனி ட்விட்டரில் மெர்சல் ட்வீட் போடுபவர்கள் எமோஜி வைத்தும் மெர்சல் செய்யலாம்.

மெர்சல்’ படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெர்சல் ட்விட்டர் குறியீடு (எமோஜி) செயலிழந்து இருக்கிறது. இந்தச் செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

mersal vijay

mersal vijay

விஜய்யின் ‘மெர்சல்’ படம் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்போடு வெளியானது அனைவருக்கும் அறிந்ததே. படம் வெளியாவதற்கு முன்பே பயங்கரமான ப்ரொமோஷன் முயற்சிகளும் செய்யப்பட்டன.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் படத்திற்காக நிறைய வித்தியாசமான புரொமோஷன் வேலைகள் செய்தனர். அதில் ஒன்றுதான் இந்த ட்விட்டர் எமோஜி. ‘மெர்சல்’ அல்லது மெர்சல் தொடர்பான ஹேஸ்டேக்குகளுக்கு விஜய்யின் படம் வந்துவிடும்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top