mersal business

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் மெர்சல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் ஒரு சில இடங்களில் தொடங்கும் நிலையில் உள்ளது, புலி, தெறி, பைரவா என விஜய் படங்கள் தொடர்ந்து ரூ 100 கோடி வரை வியாபாரம் ஆகியது.

ஆனால், மெர்சல் படம் எப்படியும் ரூ 125 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ரஜினி படங்களுக்கு பின்பு அதிகம் வியாபாரம் ஆகும் படம் இதுவாக தான் இருக்குமாம்.

ஏனெனில் விஜய் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் பர்ஸ்ட் லுக்கிற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், விஜய்-அட்லீ கூட்டணியில் தெறி ஏற்கனவே ஹிட் அடிக்க, இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.