‘மெர்சல்’ படத்தில் அரசாங்கத்தை எதிர்க்கும் வசனங்கள் எதுவுமே இடம்பெறவில்லை. சிங்கப்பூரில் 8 சதவிகிதம் மட்டுமே ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்படுகிறது, மக்களுக்கு இலவச மருத்துவத்தையும் அளிக்கிறது.

இங்கே 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கும் அரசாங்கம், ஏன் மக்களுக்கு இலவசமாக மருத்துவத்தை தரக் கூடாது? என்பதைப் படத்தில் சுட்டிக்காட்டுகிறார், விஜய். இதனால்

mersal vijay
mersal vijay

விஜய்யின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு மெர்சல் படம் நேஷனல் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளை பல அரசியல்வாதிகள் கையில் எடுத்ததே இதற்கு காரணம்.

அரசியல்வாதிகள் டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி என ஒரு ட்ராக்கில் ப்ரொமோஷன் செய்தால், நெட்டிஷன்கள் ஒருபுறம் இந்தப் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை, டாக்டர் மாறனோட ஓபனிங் சீன் ஒரு கொரியன் படத்தோட காப்பி என மெர்சல் படத்தை பாகம் பாகமாக பிரித்து மீம் போட்டு எக்ஸ்ட்ரா ப்ரோமோஷன் செய்கிறார்கள்.

mersal-box

‘மெர்சல்’ படம் மலேசியாவில் 8 நால் வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, படத்தில் இடம்பெற்ற வசனத்திற்கு ஆளுங்கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களின் எதிர்ப்பு படத்திற்கு விளம்பரமாக அமைந்தது. இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி ‘மெர்சல்’ படம் மலேசியாவில் பெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது.

mersal

மலேசியாவில் ‘மெர்சல்’ 8 நாட்களில் ரூ 14.5 கோடி வசூல் செய்துள்ளது, இதன் மூலம் ஆல் டைம் மலேசியா தமிழ் பாக்ஸ் ஆபிஸில் மெர்சல் 3-ம் இடத்திற்கு வந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் ‘எந்திரன்’ சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மசலேசியாவில் ரூ 20 கோடி வசூல் செய்து தற்போது வரை ‘கபாலி’ தான் முதலிடத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.