mersal
mersal

தெறிக்குப் பிறகு விஜய்-அட்லீ கூட்டனியில் உருவான இரண்டாவது படம் மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, காஜல் அகர்வால், சமந்தா என ஒரு மெர்சல் பட்டாளமே நடித்த இந்த படம் பல்வேறு தடைகளுக்குப் பின் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் உள்ள பல நல்ல கருத்துருக்கள் மக்களின் மனதை பிரதிபலிப்பதாகவே உள்ளது. படத்தில் வரும் மருத்துவத்துறையின் முறைகேடு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற காட்சிகள் மக்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்றது.

mersal vijay
mersal vijay

தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கிட்டத்தட்ட 200 கோடிகள் வசூல் செய்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் வெளியான இந்த படத்தை பல்வறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  மன வளர்ச்சி குன்றிய ரசிகரை சந்தித்த விஜய் - மனதை நெகிழ வைத்த சம்பவம்

நடிகர் விஜய்யின் படங்களுக்கு கேரளாவில் அதிக வரவேற்பு இருப்பதுண்டு. அந்த வகையில், கேரளாவிலும் மிகப்பெரிய ஓப்பனிங்கில் சாதித்த விஜய்யின் மெர்சல் திரைப்படம் இன்னும் வேகம் குறையாமல் ஓடிக்கொண்டிருப்பதாகத்தான் கேரளா விநியோக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

mersal-box

முதல்நாளிலேயே ரூ. 6.1 கோடி வசூலித்த மெர்சல் தற்போது 18 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதனால், கேரளாவில் விஜய்யின் முந்தைய படமான ‘தெறி’ படத்தின் வசூலான 17 கோடி வசூல் சாதனையை மெர்சல் திரைப்படம் ஓவர்டேக் செய்துள்ளது.

மேலும், கேரளாவில் விக்ரமின் ‘ஐ’ பட வசூலான 20 கோடி ரூபாய் வசூல் சாதனையை இன்னும் ஓரிரு தினங்களில் தாண்டிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதிகம் படித்தவை:  அட்லீ சார், இது தான் 'மெர்சல்' படத்தின் கதையோ.?
mersalmersal

இதேபோல், கர்நாடாகாவிலும் மெர்சல் நல்ல வசூல் செய்து வருகிறது. தெறி படம் அங்கு 7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், மெர்சல் இரட்டை இலக்கத்தில் கோடிக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கர்நாடகாவில் கபாலியின் வசூல் சாதனையை மெர்சல் முறியடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆந்திரா, தெலங்கானாவில் தெலுங்கு பதிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில், அங்கும் படம் வசூல் வேட்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.