fbpx
Connect with us

தொலைக்காட்ச்சி வரலாற்றிலேயே மெர்சல் இசை வெளியிட்டு விழாவிற்கு இதை செய்த பிரபல தொலைக்காட்சி.

News / செய்திகள்

தொலைக்காட்ச்சி வரலாற்றிலேயே மெர்சல் இசை வெளியிட்டு விழாவிற்கு இதை செய்த பிரபல தொலைக்காட்சி.

மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. விஜய், ரகுமான் உட்பட படத்தில் நடித்த பிரபலங்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். அதை சன் டிவி லைவ்வாக ஒளிபரப்பவுள்ளது.mersal audio teaser 1

விழா மாலை 6.30 மணிக்கு துவங்கியதால் வழக்கமாக 7 மணிக்கு வரும் செய்தி தொகுப்பை இந்த டிவி சேனல் ரத்து செய்துள்ளது.

இது போன்று நடப்பது வரலாற்றில் முதல் முறை என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து வருகின்றது. இந்நிகழ்ச்சியில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

முதல் ஆளாக நிகழ்ச்சிக்கு வந்த விஜய், ரெட் கார்பேட்டில் நின்று எல்லோரையும் அவரே வரவேற்றார். பிறகு விஜய் ‘நீ எந்த ஊரு நான் எந்த ஊரு’ பாடலுடன் அரங்கிற்குள் வர அரங்கமே அதிர்ந்தது.

அதை தொடர்ந்து படக்குழுவினர்கள் ஒவ்வொருத்தரும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர், பிறகு பார்த்திபன் எடுத்த எடுப்பிலேயே விஜய்யை CM என்று சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

அந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காது இருக்க தனுஷ் எண்ட்ரீ கொடுத்தார், உடனே விஜய் அவரை கட்டியணைத்து வரவேற்றார். பார்த்திபனை தொடர்ந்து பல விநியோகஸ்தர்கள் மேடை ஏறி விஜய்யின் ஹிட் பார்முலா குறித்து புகழ்ந்து பேசினர்.

பிறகு தனுஷ் மேடையேறி ‘நான் இங்கு விஜய் சாருடைய தோழனாக தான் வந்துள்ளேன், தோளில் கை போட்டும் பேசுவார், கை போட விட்டும் பேசுவார்’ என கூற ரசிகர்கள் விசில் சத்தத்தில் அரங்கை அதிர வைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top